Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர்

14 மே, 2026 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-music-composer-who-couldnt-even-listen-to-his-own-songs
Advertisement

ஏவிஎம் நிறுவனத்தில் ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் ஆர்.சுதர்சனம். இவரைத் தெரிந்த அளவிற்கு இவரது அண்ணன் ஆர்.கோவர்த்தனைப் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இசை குடும்பத்தை சேர்ந்த இவர் 'ஜாதகம்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்களுக்கும் இசை அமைத்தார். பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாசை அறிமுகப்படுத்தியதும் இவர்தான்.

1960ம் ஆண்டு “கைராசி” என்ற படத்திற்கு இசை அமைத்தார். இந்தப் படம் வெளிவந்தபோது, எம்.ஜி.ஆரின் 'மன்னாதி மன்னன்' படமும் சிவாஜி நடித்த 'பெற்ற மனம்' படமும் வெளிவந்தன. ஆனால் அவற்றை முறியடித்து, 'கைராசி' வெற்றியடைந்தது. அதற்கு முக்கியமான ஒரு காரணம் கோவர்த்தனத்தின் இசை. 'காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்' , 'காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே' , 'கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ' , 'அன்புள்ள அத்தான் வணக்கம்' போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன.

1967-ல் வெளிவந்த 'பட்டணத்தில் பூதம்' படத்தில் 'உலகத்தில் சிறந்தது எது”, 'கண்ணில் கண்டதெல்லாம் காட்சியாக', 'சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன. இதற்கடுத்து இவர் இசையமைத்த 'பூவும் பொட்டும்' படத்தில் 'நாதஸ்வர ஓசையிலே', 'உன்னழகைக் கண்டுகொண்டால்' போன்ற அற்புதமான பாடல்கள் இடம்பெற்றன.

இப்படி பல படங்களுக்கு இசை அமைத்த கோவர்த்தன் சரியான வாய்ப்புகள் இல்லாமல் விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா என பல இசையமைப்பாளர்களிடம் இசை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய கோவர்த்தனத்திற்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பல இனிய பாடல்களை கொடுத்த கோவர்த்தன் தன் கடைசி காலத்தில் கேட்கும் திறனை இழந்ததுதான் காலத்தின் கொடுமை. அவர் இசை அமைத்த பாடல்களைகூட அவரால் கேட்க முடியாமல் போனது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடைஆர்த்தி ரவி குறித்து பேச ... பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap