Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்'

12 மே, 2026 - 06:18 IST
எழுத்தின் அளவு:
Exam-Webseries-The-gift-of-virtue-that-Dushara-gives
Advertisement

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்த எக்ஸாம் என்ற வெப்சீரியஸ், மே 15ல் ரிலீஸ் ஆகிறது. வெப்சீரிஸ் குறித்து சற்குணம் கூறுகையில் 'கடந்த பல ஆண்டுகளாக குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை இந்த வெப்சீரிசில் காண்பிக்கிறேன். எந்த ஆட்சி, எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஊர் பெயர்களை கூட மாற்றியுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்தபடியே கதை வந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலமாக வெளிப்படையான போட்டி தேர்வு நடக்கும் என தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில் நடந்த முறைகேடு இனி நடக்காது என நம்புகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தவறுகள் இனி நடக்காது என நம்புகிறோம். அந்த முறைகேடு தொடர்பு பல வழக்குகள் இன்றும் நடந்து கொண்டு இருக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தால் சில முறைகேடுகளை வெளிப்படையாக சொல்ல முடியாது' என்றார்.

நடிகை துஷாரா பேசகையில், ‛‛இந்த வெப்சீரிஸ் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் நடித்த சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெற்றி பெற்றது. இதுவும் ஓடிடியில் வருகிறது. இந்த வெப்சீரிஸ் ஆக் ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு நடிகை விஜயசாந்தி உடன் ஒப்பிட்டு பேசியது மகிழ்ச்சி. ஒரு ஹீரோவுக்கு ஒரு இயக்குனர் வெற்றி படம் கொடுத்தால் அவருக்கு பரிசு பொருட்களை அவர் கொடுப்பார். வாட்ச், செயின், பைக், கார் என இயக்குனர் சற்குணம் எதை கேட்டாலும் அவருக்கு நான் கொடுப்பேன்'' என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதிசூர்யாவின் கருப்பு பட சிறப்பு ... வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap