Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய்

12 மே, 2026 - 05:03 IST
எழுத்தின் அளவு:
A.R.Murugadoss-advice-Jai-still-follows-it-today
Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. மே 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த விழாவில் ஹீரோ ஜெய் பேசுகையில் ''நான் பல இயக்குனர் படங்களில் நடித்துவிட்டேன். பல இயக்குனர்களை பார்த்து வியந்து இருக்கிறேன். என்னிடம் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் என்பேன். அவர் தயாரித்த எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களில் நடித்து இருக்கிறேன். அப்போது அவர் சொன்ன ஒரு அட்வைஸை இன்றும் கடைபிடிக்கிறேன், அது எனக்கு உபயோகமாக இருக்கிறது.

அந்த படப்பிடிப்பு சமயத்தில் என்னிடம் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், உங்களுக்கு மறுநாள் படப்பிடிப்பு என்றால் இரவில் சீக்கிரம் துாங்கி விடுங்கள். நீங்கள் சரியாக துாங்காவிட்டால், மறுநாள் உங்க கண்ணில் கரு வளையம் வரும். முகம் டல்லாக தெரியும். அதற்கு நிறைய மேக்கப்போட வேண்டும். அதற்கு ஏற்ப லைட்டிங் செட் பண்ண வேண்டும். நீங்கள் சரியாக துாங்கிவிட்டால் இந்த பிரச்னைகள் வராது என்றார்.

அதை நான் புரிந்து கொண்டு படப்பிடிப்பு என்றால் சரியான நேரத்துக்கு துாங்கி விடுகிறேன். இந்த படத்தின் இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது நான் முருகதாஸ் உதவியாளர் என்றார். உடனே படம் பண்ண சம்மதித்துவிட்டேன். இந்த படத்தின் திரைக்கதையும் வித்தியாசமானது '' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேச ஆரம்பித்த ஜெய், தமிழக முதல்வர் பாணியில் 'என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்துவிட்டு, ரொம்ப நாளாக இப்படி பேச ஆசை என்றார். மேலும் அவர் பேசுகையில் இந்த படத்தில் விஜய் ரசிகராக வருகிறேன். அதனால், அவர் பாடி லாங்குவேஜ் இருக்கும். இடைவேளைக்குபின் கதை மாறும்' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்!விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, ... 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை 'பெத்தி' படம் தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap