லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

டொவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 'கிரேசியாஸ் எல் கிளாசிகோ' என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர், ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கேம்ப் நவ் என்கிற கால்பந்து மைதானத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்குக் காரணமும் உண்டு.
இப்படத்தின் கதை கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள கால்பந்து கலாச்சாரத்தையும், உலகப்புகழ் பெற்ற ஸ்பானிஷ் கால்பந்து ரசிகர் ஒருவரின் மனநிலையையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ளதாம். மலையாள சினிமா வரலாற்றில் ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தில் ஒரு படத்தின் டைட்டில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். முஷின் பெராரி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இவர் கடந்த 2015-ல் வெளியான கே.எல் 10 என்கிற படத்தை இயக்கியவர். 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..