Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

11 மே, 2026 - 06:20 IST
எழுத்தின் அளவு:
Chief-Minister-Yogi-Adityanath-granted-tax-exemption-to-the-film-Krishnavatharam-in-UP
Advertisement

சில நாட்களுக்கு முன்பு ஹிந்தியில் உருவாகி தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியான படம் 'கிருஷ்ணாவதாரம் ; பார்ட் 1: தி ஹார்ட்'.. கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்த்திக் கஜார் என்பவர் இயக்கியுள்ளார். சித்தார்த் குப்தா, ஸ்மிதா பட், ஜாக்கி ஷெராப், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்புக் காட்சி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. லக்னோ பவனில் நடைபெற்ற இந்த சிறப்புக் காட்சியில் முதல்வருடன் ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். படத்தைப் பார்த்த பிறகு, "சனாதன கலாச்சாரம் மற்றும் இந்திய மரபுகளைப் பிரம்மாண்டமாக இப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. இது கிருஷ்ணரின் வாழ்க்கையை மனிதநேயப் பார்வையில் சித்தரிக்கிறது," என்று பாராட்டியுள்ள யோகி ஆதித்யநாத், இப்படத்திற்கு வரி விலக்கு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்து இருக்க, மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படத்தின் சிறப்புக் காட்சிகளைத் திரையிட ஏற்பாடு செய்யுமாறு தகவல் தொடர்புத் துறைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இப்படத்தில் ஆளுநர் ஆனந்திபென் படேலின் பேத்தி சமஸ்கிருதி, சத்தியபாமா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல்'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் ... மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KR india - india,இந்தியா
12 மே, 2026 - 06:05 Report Abuse
KR india மிக்க நன்றி மக்கள் முதல்வர் யோகி ஆதியநாத் அவர்களே சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap