லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நடிகராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி தனது நண்பருடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். தற்போது தனியாக சூர்யா நடிக்கும் 'கருப்பு' படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
நீதிமன்றதிற்கு நீதி கேட்டு வரும் அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கட்டப் பஞ்சாயத்து வழக்கறிஞராக பாலாஜி நடித்துள்ளார். 'பேபி கண்ணன்' என்பது அவரது கேரக்டர். அப்பாவி கிராமத்து முதியவரான இந்திரனை ஏமாற்றி அவர் பணம் பறிக்க அவருக்கு ஆதரவாக களம் இறங்கும் சூர்யாவுக்கு, பாலாஜிக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. இருவருக்கும் சண்டை காட்சிகளும் உள்ளன. ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடிக்கும் முதல் படமும் இதுதான். இதன் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.