Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித்

11 மே, 2026 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Will-Chief-Minister-Vijay---Rajini-meet-Will-Ajith-greet-his-friend-in-person
Advertisement

தவெக தலைவர், நடிகர் விஜய் தமிழக முதல்வர் ஆகிவிட்டார். இவர் கட்சி தொடங்கியதில் இருந்து ரஜினிக்கும், அவருக்கும் நட்பு சரியாக இல்லை. திமுக ஆதரவாளராகவே ரஜினி இருந்தார் என்று கூறப்பட்டது. ரஜினி அரசியலில் இருந்து விலகியது குறித்து ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டிக்கு காலம் பதில் சொல்லும் என கொஞ்சம் பதில் அளித்தார் ரஜினிகாந்த். அதேசமயம், தவெக வெற்றி பெற்றவுடன் ரஜினி வாழ்த்து சொல்லவும் தவறவில்லை. அப்படியே, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தும் பேசினார்.

இந்நிலையில், முதல்வர் விஜய், ரஜினிகாந்த் சந்திப்பு நடக்குமா?, முதல்வரை நேரில் வாழ்த்துவாரா ரஜினிகாந்த்? பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான மனநிலையில் இருக்கும் ரஜினிகாந்த் இந்த மனஸ்தாபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அஜித் அது பற்றி கவலைப்படவில்லை.

கடந்த ஆட்சியில் அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்லவில்லை. இந்த ஆட்சியின் நிலை வேறு. அவரும், விஜயும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு அவர் போனில் வாழ்த்தியதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நட்பின் அடிப்படையில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து அஜித் வாழ்த்துவாரா? பழைய நிலைப்பாட்டில் இருப்பாரா என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.

இதற்கிடையில், சினிமா சங்கங்கள், சினிமாக்காரர்கள் என நுாற்றுக்கும் அதிகமானவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்த நேரம் கேட்டு இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல்விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : ... நுாறுசாமி கதை உருவானது எப்படி? நுாறுசாமி கதை உருவானது எப்படி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 மே, 2026 - 12:05 Report Abuse
தொளபதி என்னாது? ரஜினி விஜய் நட்பா? ஒரு தலைமுறை இடைவெளி எப்படி நட்பாக முடியும்? அப்ப ரஜினி எம்ஜியார் சிவாஜியுடன் வைத்திருந்தது நட்பா? தலைமுறை இடைவெளி இருக்கும்போது வரவேண்டியது மரியாதை. ஆரம்ப கால வளர்ச்சியில் ரஜினியை பயன்படுத்திய விஜய், பின்னாளில் படிப்படியாக தவிர்த்து ஒதுங்கி விட்டார். கட்சி தொடங்கிய போதும் வெற்றி பெற்ற போதும் வாழ்த்து கூறிய ரஜினிக்கு நன்றி தெரிவித்ததாக கூட நினைவில்லை. ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கும் போது பண்பு, தனிப்பட்ட குணநலன்களை கண்டு கொள்ளாத தலைமுறையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap