இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

ரிதேஷ் தேஷ்முக் எழுதி நாயகனாக நடிக்க, மற்றும் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், வித்யாபாலன், மகேஷ் மஞ்ரேக்கர், ஜெனிலியா, பர்தீன் கான், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், பொமன் இரானி உள்ளிட்டவர்கள் நடித்து மே 1ம் தேதி வெளியான மராத்தி திரைப்படம் 'ராஜா சிவாஜி'.
இப்படம் வெளியான முதல் நாளிலேயே 12 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மராத்தி படங்களின் முதல் நாள் வசூலில் சாதனையைப் படைத்தது. தற்போது இப்படம் முதல் வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்த முதல் வாரத்தில் சுமார் 60 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரையில் வெளியான மராத்தி திரைப்படங்களில் 'சாய்ரட்' படம் 110 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
அதற்கடுத்து 'பைபன் பாரி தேவா' படம் 92 கோடிகளுடன் இரண்டாமிடத்திலும், 'வேத்' படம் 75 கோடிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது.