பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

சில்க் ஸ்மிதா என்றாலே அவர் ஆடிய கவர்ச்சி நடனங்கள்தான் நினைவுக்கு வரும், அலைகள் ஓய்வதில்லை மாதிரி சில படங்கள் அவரது நடிப்புக்காக நினைவுக்கு வரும். ஆனால் பல படங்களில் அவர் நல்லதொரு நடிப்பையும் கொடுத்திருக்கிறார். அதில் முக்கியமானது 'பிக்பாக்கெட்'. இந்த படம் பெரிய வரவேற்பை பெறாததால் சில்க் ஸ்மிதாவின் நடிப்பும் அதிகமாக வெளியில் தெரியாமல் போனது.
கதைப்படி சத்யராஜ் ஒரு பிக்பாக்கெட் திருடன். நாயகி ராதா தன் தங்கை திருமணத்திற்காக வங்கியில் திருடுவார். அந்த பணத்தை சத்யராஜ் திருடிக் கொண்டு வந்து விடுவார். இதை கேட்க ராதா போவார். பின்னர் இருவருமே திருட்டால் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து திருட்டு தொழிலை விட்டுவிட்டு இருவருமே நேர்மையானவர்களாக மாறிவிடுவார்கள். ராதா, சத்யராஜை போலீஸ் எக்சாம் எழுத வைத்து போலீசாக்கி விடுவார். இந்த கதைகளுக்கு இடையே சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்த சிலக் ஸ்மிதா அதை விட்டு விட்டு போலீஸ் எக்சாம் எழுதி அவரும் போலீசாகி விடுவார். அதற்கு சத்யராஜ் உதவி செய்வார். இதனால் சத்யராஜை ஒரு தலையாக சில்க் ஸ்மிதா காதலிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் சத்யராஜை கைது செய்ய வேண்டிய நிலையம் சுமிதாவிற்கு வரும், இப்படி போகும் படத்தின் கதை.
இந்த படத்தை ஜி.எம்.குமார் இயக்கினார், கே.பி.பிலிம்ஸ் பாலு தயாரித்தார். வேலு பிரபாகரன் ஒளிப்பதிவு செய்தார், இளையராஜா இசை அமைத்தார். சென்சார் பிரச்னையயில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.