கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

அழியாத கோலங்கள்2, ட்ரீம் கேர்ள் படங்களை இயக்கிய எம்.ஆர்.பாரதியின் அடுத்த படம் 'சைக்கிள் கேப்'. நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிக்க, காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் கதையாக வருகிறது.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‛‛ ‛சிந்து பைரவி', 'முகவரி', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்களில் காதலும் இருந்தது, இசையும் இருந்தது. இந்த படமும் அந்த மாதிரி ஜானர். வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. அதை இதில் சரியாக பயன்படுத்தி இருக்கிறோம். உறவுகளை மையப்படுத்திய கதைதான் 'சைக்கிள் கேப்'.
இதில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உணர்வுகளுக்கு பாலமாக இசை இருக்கும். இந்த திரைப்படம் நவீன காட்சியமைப்புகளுடன் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிளாசிக்கல் இசையும் படத்தில் இருக்கும். புதுமுகம் சதீஷ் பத்மநாபன் இசையமைக்கிறார். நரேஷ் ஐயர், ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் கவுஷிக் ஸ்ரீதரன் பாடியிருக்கிறார்'' என்கிறார்.