'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் கவுதம் தின்னனுரி. நானியை வைத்து ‛ஜெர்ஸி' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து விஜய் தேவரகொண்டாவை வைத்து ‛கிங்டம்' என்ற படத்தை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கவுதம் தின்னனுரி. இந்தமுறை இந்த படத்தை தெலுங்கில் இயக்காமல் தமிழில் எடுக்க முடிவெடுத்துள்ளார். இதற்காக தமிழ் பட தயாரிப்பாளர்கள் மற்றும் சில நடிகர்களிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை விவாதம் தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.