Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்பி சவுத்ரி உடல் நல்லடக்கம் : திரளாக வந்து திரையுலகினர் அஞ்சலி

07 மே, 2026 - 01:27 IST
எழுத்தின் அளவு:
RB-Choudary-funeral-Film-fraternity-pays-tribute-in-droves
Advertisement

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் நேற்று முன்தினம் காலமானார். சென்னைக்கு நேற்று அவர் உடல் கொண்டு வரப்பட்டு, மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று தவெக தலைவர் விஜய், திமுக.,வின் உதயநிதி, நடிகர்கள் தனுஷ், கார்த்தி, சிம்பு, விஷால் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை ரஜினிகாந்த், சிம்ரன், ரவி மோகன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அவர் குடும்ப முறைப்படி இறுதிச் சடங்கு நண்பகல்12 மணியளவில் துவங்கியது. அவர்கள் வழக்கப்படி வாகனத்தில் அவர் உடல் கொண்டு செல்லப்படவில்லை. தோளில் சுமந்தபடி சென்னை மயிலாப்பூர், கைலாச அருகில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது வாரிசுகளான ஜித்தன் ரமேஷ், ஜீவா உள்ளிட்டோர் இறுதிச் சடங்கு பணியை செய்தனர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்குனர்கள் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார், லிங்குசாமி போன்றவர்கள் நேற்று முதல் சவுத்ரி வீட்டில் இருந்தனர். அவரால் படம் பெற்ற பல்வேறு நடிகர்கள் ஊழியர்களும் அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக மன்சூர் அலிகான், கனல் கண்ணன், ரஹ்மான், சிம்ரன், ராகவா லாரன்ஸ், உதய், தயாரிப்பாளர் முருகராஜ், பேரரசு, மேஜர் ரவி, மாணிக்கம் நாராயணன், நாகா அசோக், ஸ்டன்ட் சில்வா, ஷோபி லலிதா, இயக்குனர் பாலகிருஷ்ணன், ரவி மோகன், தமீம் அன்சாரி, திருப்பூர் சுப்ரமணியம், அமீர், பழம்பெரும் நடிகை ஜெயபாரதி, மலையாள நடிகர் மம்முட்டி, சூரி, சந்தானம், சிபிராஜ், ஆனந்த்ராஜ், பார்த்திபன், நாம் தமிழர் கட்சியின் சீமான், மீனா, உள்ளிட்ட பல திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் நாயகனாக நடித்து, தோல்வியை சந்தித்த “ஸ்ரீ ராமானுஜர்”பிளாஷ்பேக்: பத்திரிகையாளர் படத்தின் ... தமிழ் சினிமாவிற்கு வரும் ‛ஜெர்ஸி' பட இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு வரும் ‛ஜெர்ஸி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap