Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், மீதிக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டும் : எஸ்.ஜே. சூர்யா

05 மே, 2026 - 07:06 IST
எழுத்தின் அளவு:
Vijay-has-made-half-of-it-come-true,-I-have-to-work-hard-for-the-rest-S.J.-Surya
Advertisement

நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 'தமிழக வெற்றி கழகம்' என்கிற கட்சியைத் தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விரைவில் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு 'குஷி' என்கிற ஹிட் படத்தை கொடுத்தவரும், 'மெர்சல்', 'வாரிசு' உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து நடித்தவருமான எஸ்.ஜே. சூர்யாவும் தனது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "வாரிசு திரைப்படத்தின் போது, 'நான் உங்கள் கையால் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விரைவில் வாங்குவேன் சார்' என்று கூறியிருந்தேன். நான் சொன்னதில் பாதி இப்போது உண்மையாகிவிட்டது. உங்களிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று மீதியை நிறைவேற்றுவதற்காக நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது நண்பா / சார்... உங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. நான் இப்போது ரொம்ப குஷியாக இருக்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம்தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை ... ஆர்பி சவுத்ரி மரணம் : ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் திரையுலகினர் இரங்கல் ஆர்பி சவுத்ரி மரணம் : ரஜினி, கமல், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap