சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் பெத்தி. இதில் அவருடன் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, சாய்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்பதிவுகள் அமெரிக்காவில் மே 7ம் தேதி அன்று தொடங்க உள்ளது. விரைவில் திரையரங்குகளில் பெத்தி படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் பெத்தி படம் திரைக்கு வர 30 நாட்கள் உள்ள நிலையில், இன்றைய தினம் இப்படத்தின் விளம்பரங்களுக்கான களத்தை அமைக்கும் விதமாக தயாரிப்பாளர்கள் தற்போது ராம் சரணின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அந்த புதிய போஸ்டரில் , ஒரு கரும்பு தொழிற்சாலை அருகில் கையில் சுருட்டு பிடித்தபடி புன்னகையுடன் மகிழ்ச்சியாக காணப்படுகிறார் ராம்சரண்.




