மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

தமிழக சட்டசபைத் தேர்தலில் சில அதிர்ச்சிகரமான விஷயங்களும் நடந்துள்ளன. தூத்துக்குடி சட்டசபைத் தேர்தலில் திமுக அமைச்சர் கீதா ஜீவன் தோல்வி அடைந்துள்ளார்.
அவரை 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத். இவர் தவெக தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பர். திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கிறார்.
இவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட ஒரு சில கட்சித் தொண்டர்களே உடன் சென்றார்கள். ஆனாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு அமைச்சரையே தோற்கடித்துள்ளார். 2006, 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை எம்எல்ஏ ஆக இருந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தூத்துக்குடி சட்டசபையில் பதிவான வாக்குகளில் தவெக ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், திமுக கீதா ஜீவன் 62,805 வாக்குகளும், அதிமுக செல்லபாண்டி 26,213 வாக்குகளும், நாம் தமிழர் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் 11,752 வாக்குகளும் பெற்றுள்ளனர்.