மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

தற்போது திரைப்படத்துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் முழுநீள படங்களுமே உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் அகாடமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏஜ படங்கள் ஆஸ்கர் விருது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகாடாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களால் எழுதப்பட்ட கதையில் மனிதர்கள் மட்டுமே நடிக்கும் படங்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். ஆஸ்கர் விருதுகளுக்கு தகுதி பெற வேண்டுமானால், அந்த நடிப்பானது ஒரு மனிதரால் நேரடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். திரைக்கதை பிரிவில் போட்டியிட வேண்டுமானால், அந்த கதை முற்றிலும் ஒரு மனிதரால் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். ஏஐ-ல் உருவாக்கப்பட்ட முழுமையான கதைகள் தகுதியற்றதாகக் கருதப்படும். திரைப்படத் தயாரிப்பில் ஒரு கருவியாக ஏஐ-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரு படைப்பின் அடிப்படை உயிரோட்ட ம் மனிதர்களிடமிருந்து வந்திருக்க வேண்டும். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கியமான முடிவையும் அறிவித்துள்ளது. வெளிநாட்டு படங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அந்த படத்தில் பணியாற்றிய தனிநபருக்கு சொந்தமானது. அவர் சார்ந்த நாட்டிற்கு சொந்தமானதல்ல என்றும் அறிவித்துள்ளது. வருகிற 2027ம் ஆண்டு விருது விழாவில் இருந்து இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.