கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் தெலுங்கு நடிகர் மோகன் பாபு. அவரது மகள் நடிகை லட்சுமி மஞ்சு இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை த்ரிஷாவுக்கு ஸ்பெஷலான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
என்றும் பேரழகும் நளினமும் கொண்ட த்ரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொண்டாடுவதற்கு எத்தணை அற்புதமான ஒரு நாள் இது. இந்த பிரமாண்டமான வெற்றியின் மூலம், இந்த பிரபஞ்சமே உங்களுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை அளிக்க தீர்மானித்துவிட்டது என்று நினைக்கிறேன். இன்று உங்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டங்கள், இந்த நாள் உங்களுக்கு மிகவும் மாயாஜாலமான ஒன்றாக அமையட்டும், டார்லிங்,” என வாழ்த்தியுள்ளார்.
மேலும் தவெகவின் வெற்றிக்கு, “ஓ மை காட், அந்த கர்ஜனை நிஜமாகிவிட்டது. இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு எனது அன்புக்குரிய விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்தகள். இன்று தமிழ்நாட்டில் வரலாறு படைக்கப்பட்டு வருகிறது. மக்களின் இதயங்களை நீங்கள் எப்போதும் வென்றிருந்தீர்கள். இப்போது மக்களின் ஆணை உங்கள் கையில் உள்ளது. தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் தளபதி விஜய்,” என வாழ்த்தியுள்ளார்.