Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : தேவா அறிமுகமான 'மாட்டுக்கார மன்னாரு'

02 மே, 2026 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Flashback-Devas-debut-as-the-cowherd-Mannaru
Advertisement

பொதுவாகவே இசை அமைப்பாளர் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானது 'வைகாசி பொறந்தாச்சு' படம் தான் என்பார்கள். ஆனால் அதற்கு முன்பே அவர் 'மாட்டுக்கார மன்னாரு' என்ற படத்திலேயே அறிமுகமாகி விட்டார். அதற்கு பிறகு மனசுக்கேத்த மகராசா படத்திற்கு இசை அமைத்தார். மூன்றாவதாகத்தான் 'வைகாசி பொறந்தாச்சு' படத்திற்கு இசை அமைத்தார். பிரசாந்த் அறிமுகமான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதால் தேவா பிரபலமானார். குறிப்பாக "சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி", "தண்ணிகொடம் எடுத்து..." போன்றவை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தன.

'மாட்டுக்கார மன்னாரு' படத்தில் சந்திரசேகர் கதை நாயகனாக நடித்திருந்தார். அருந்ததி, அஸ்வினி நாயகிகளாக நடித்திருந்தனர். குமரிமுத்து, செந்தில், பண்டரிபாய், காந்திமதி நடித்திருந்தார்கள். இந்த படத்தில் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இவரது பெயரை சி தேவா என குறிப்பிட்டனர்.

'மனசுக்கேத்த மகராசா' படத்தில் ராமராஜன், நாயகனாகவும், சீதா நாயகியாகவும் நடித்திருந்தனர். தீனதயாளன் என்பவர் இயக்கி இருந்தார். இதிலும் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இந்த இரு படத்தின் பாடல்களும், வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு பிறகு கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டது.

முன்னிணி இசை அமைப்பாளரான அனைவரும் முதல் படத்தில் ஹிட் கொடுத்தவர்கள். ஆனால் தேவா 2 படத்தில் தோல்வி அடைந்து 3வது படத்தில் வெற்றி பெற்றவர். தேவாவிற்கும் முதல் படம் வெற்றிப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல் இரண்டு படம் பற்றி பெரிதாக பேசிக் கொள்வதில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: மனைவியின் பெருமை பேசிய படம்பிளாஷ்பேக்: மனைவியின் பெருமை பேசிய ... 'ஜனநாயகன்' வெளியீடு : முடிவு செய்யப் போவது யார் தெரியுமா? 'ஜனநாயகன்' வெளியீடு : முடிவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap