Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சர்ச்சை பாடல் விவகாரம் ; இயக்குனருக்கு ஆதரவாக குரல் கொடுத்த கிச்சா சுதீப்

01 மே, 2026 - 04:17 IST
எழுத்தின் அளவு:
Controversial-song-issue-Kichcha-Sudeep-voices-support-for-director
Advertisement


கன்னடத்தில் துருவ சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே டி ; தி டெவில்'. இயக்குனர் பிரேம் இயக்கி உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்துடன் பாலிவுட் நடிகை நோரா பதேகி ஒரு பாடலுக்கு இணைந்து ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளார். கடந்த மாதம் இந்த பாடலின் ஹிந்தி வெர்ஷன் வெளியானது. இந்த பாடல் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. பெண்கள் ஆணையம் சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பும் வரை இந்த விஷயம் சீரியஸ் ஆக சென்றது.

அதுமட்டுமல்ல படத்தின் இயக்குனர் பிரேம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் பிரேம் இப்படி விமர்சனங்களுக்கு ஆளாவது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார்.

இது குறித்த சுதீப் கூறும்போது, ''வெளியில் இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இந்த விஷயத்தை பார்க்கட்டும்.. கருத்து கூறட்டும். ஆனால் நம்மவர்கள் இயக்குனர் பிரேம் இந்த கன்னட சினிமாவுக்கு கொடுத்துள்ள விஷயங்களை கவனித்து பார்க்க வேண்டும். பெற்றோரை பற்றிய பல பாடல்களை, அம்மாவிற்கு சமர்ப்பிக்கும் விதமாக திரும்பத் திரும்ப கேட்கும் உணர்ச்சிகரமான பல பாடல்களை கொடுத்தவர்தான் பிரேம். சில நேரங்களில் அவர் தவறு செய்திருக்கலாம். சில பாடல்கள் சரியாக அமையாமல் போய் இருக்கலாம். அதற்காக அவரை சிறுமைப்படுத்தும் விதமாக விமர்சிப்பது தவறு” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விருஷகர்மாவில் புதையலைத் தேடி அலையும் மனிதராக நாகசைதன்யாவிருஷகர்மாவில் புதையலைத் தேடி ... 'வாழ-2' ஓட்டம் நிறைவுக்கு வருகிறது : ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு 'வாழ-2' ஓட்டம் நிறைவுக்கு வருகிறது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap