இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

கடந்த 2019ல் கொரிய மொழியில் வெளியான படம் பாரசைட். இந்த படம் 2020ல் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்துகொண்டு நான்கு விருதுகளை கைப்பற்றியது. இந்த படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை ஜாங் ஹை ஜின். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தென் கொரிய மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது மலையாளத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இது மலையாளம் மற்றும் கொரியா என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தை சஞ்சீவ் சிவன் இயக்குகிறார், இவர் பிரபல ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன் மற்றும் சங்கீத் சிவன் ஆகியோரின் சகோதரர் ஆவார். இவர் மம்முட்டியை வைத்து அபராசித்தன் படத்தை இயக்கியவர்.