Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

90 சதவீத மகுடம் படப்பிப்பு நிறைவு : இயக்குனர் விஷால் தகவல்

27 ஏப், 2026 - 04:10 IST
எழுத்தின் அளவு:
90-percent-of-the-shooting-of-Maagudam-is-complete-Director-Vishal-informs
Advertisement

நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் 'மகுடம்'. இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை முதலில் ரவி அரசு இயக்கினார். ஆனால், அவருக்கும், விஷாலுக்கும் கருத்து மோதல் ஏற்பட படத்திலிருந்து ரவி அரசு விலகினார். அதன்பின் விஷால் இயக்குனர் பொறுப்பை ஏற்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது அது முடிந்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “காக்கிநாடாவில் கடுமையான இரண்டு வார படப்பிடிப்புக்குப் பிறகு 'மகுடம்' குழு சென்னைக்கு திரும்பியுள்ளது.

என் அருமையான குழுவினருக்கு நன்றி, குறிப்பாக என் DOP அபினந்தன், பிருந்தா மாஸ்டர் மற்றும் என இயக்கக் குழுவினருக்கு... உங்களுக்கு பாராட்டுகள் பிரபா, எனக்காக எல்லாவற்றையும் தாங்கிப் பிடித்துக் கொண்டதற்கு. என் முழு நடிகர் குழுவுக்கும், குறிப்பாக அஞ்சலி, உங்களின் எந்த ஈகோவும் இல்லாத, ஆடம்பரமில்லாத தொழில்முறை அணுகுமுறைக்கு. என் பெஸ்டி ஜான் விஜய், ஜேபி சார், வெப்ப அலையில் தவித்தும் அமைதியாக தங்கள் வேலையைச் செய்த அத்தனை பெண்களுக்கும், மேலும் என் சிறந்த பாதியான சாய் தன்சிகாவுக்கு... இந்தப் பயணத்தில் நான் கால் விரல் வரை நோய்வாய்ப்பட்டிருந்த போதும் என்னைத் தாங்கி நடத்தியதற்கு. நான் விட்டுக்கொடுக்கவில்லை.

படத்தின் மிகக் கடினமான 90 சதவீத பகுதியை முடித்துவிட்டோம். நாளை முதல் சென்னையில் நமது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. GV-யின் மேஜிக் விரைவில் நமது முதல் சிங்கிளுடன் வெளிப்படப் போகிறது. கடவுள் ஆசீர்வதிப்பாராக,” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, கமல், விஜய், அஜித் : தவிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்ரஜினி, கமல், விஜய், அஜித் : தவிக்கும் ... கேரளாவில் 'மைசா' படத்தில் ராஷ்மிகாவின் ஆக்சன் காட்சிகள் படப்பிடிப்பு துவக்கம் கேரளாவில் 'மைசா' படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap