மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. மீண்டும் விஜய் நடிக்கப் போகிறார் என்று தகவல் பரவி வரும்நிலையில், அது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறார் விஜய். தேர்தல் முடிவுகளை பார்த்தபின் சினிமாவா? அரசியலா? என்பதை முடிவு செய்வார் என தெரிகிறது.
மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள். அஜித் சினிமாவில் நடித்து ஓராண்டு ஆகிவிட்டது. அவரின் அதிக சம்பளம் காரணமாக, அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என தகவல். மே 1ம் தேதியாவது அஜித் தனது புதுப்பட அறிவிப்பை வெளியிடுவாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
கமல் தயாரிப்பில், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். சிபி வெளியேறிவிட்டார். அஷ்வத் மாரிமுத்து இயக்கப் போகிறார். இயக்குனர் ஷங்கர் வில்லன், சிம்ரன், ஷோபனா நடிக்கப் போகிறார்கள் என என தகவல் வந்தாலும், அந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சொல்லாமல் இருக்கிறார் ரஜினி.
வெங்கட்பிரபு படம் குறித்து பேசாமல் இருக்கிறார் சிவகார்த்திகேயன். தக் லைப் படத்திற்கு பின் தமிழில் நடிக்கும் படத்தை அறிவிக்காமல் இருக்கிறார் கமல்ஹாசன். இப்படியாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் தவித்து வருகிறது.