அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். அவரது மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்க தமிழ் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் 'ஏக் தின்' படத்தின் நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடைபெற்றது. அதில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை மேடையில் கலைஞர்கள் பாடினார்கள்.
அவற்றைக் கேட்ட அமீர்கான் கண்ணீர் விட்டு அழுதார். அவருடைய டீ ஷர்ட்டிலேயே கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஜுனைத் மற்றும் சாய் பல்லவி அதைப் பார்த்து நெகிழ்ந்தனர்.
பின்னர் மேடையில் பேசிய அமீர்கான், “நம் நாட்டில் இப்போது சிறந்த நடிகை சாய் பல்லவி தான்,” என்று பாராட்டினார்.
காதல் கதையாக உருவாகியுள்ள 'ஏக் தின்' படம் மே 1ம் தேதி தமிழில் 'ஒரு நாள்' என்றும், தெலுங்கில் 'ஒக்க ரோஜு' என்றும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.