மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக கமர்சியல் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கி இருந்தாலும் சுரேஷ்கோபி, ஷாஜி கைலாஷ் காம்பினேஷன் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒன்று. தமிழில் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன், அஜித் நடித்த ஜனா, ஆர்கே நடித்த எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் வரவு என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ்.
இந்த நிலையில் இவரது மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ், நடிகர் திலீப் நடிக்கும் அவரது 152 வது படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார், இந்த படத்திற்கு 'நீகம்' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி உள்ளது. கமர்சியல் அம்சங்கள் கொண்ட திரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.