Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பட்டாசு ஆலை விபத்தில் பலியானார் நடிகை நமீதா பிரமோத்தின் மேக்கப் மேன்

24 ஏப், 2026 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Actress-Namitha-Pramods-makeup-man-dies-in-cracker-factory-accident
Advertisement

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்கள் வரை முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை நமீதா பிரமோத். தமிழில் உதயநிதி ஜோடியாக நிமிர் என்கிற படத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக குறைந்த அளவு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக பர்சனல் மேக்கப் மேனாக பணியாற்றியவர் பிஜீஸ் பாலன் என்பவர் இவர் திருச்சூரில் உள்ள முண்டத்திகோடு என்கிற பகுதியை சேர்ந்தவர்.

இந்த நிலையில் சமீபத்தில் முண்டத்திக்கோடு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த கிட்டத்தட்ட 9 பேர் பலியானார்கள். அதில் இந்த மேக் அப் மேன் பீஜீஸ் பாலனும் ஒருவர். இவரது மரண செய்தி கேட்டு அதிர்ந்து போன நடிகை நமீதா பிரமோத் அவரது மறைவுக்கு தனது இரங்கல் செய்தி ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “இந்த சூழலில் என் மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. உங்களைப் போன்ற ஒருவரை இப்படி இந்த வெடி விபத்தில் இழப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. நீங்கள் எட்டு வருடங்களாக என் மீது அக்கறை எடுத்துக்கொண்டு என்னுடைய பாதுகாப்பு, சந்தோஷம், வசதி என ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டீர்கள். அந்த வகையில் எனக்கு ஒரு சகோதரனாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இனி நீங்கள் இல்லாமல் இன்னொரு படப்பிடிப்பில் நுழைவது என்பது எனக்கு ஒரு சவாலாக தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜின் கலிபா ரிலீஸ் தேதி அறிவிப்புபிரித்விராஜின் கலிபா ரிலீஸ் தேதி ... திரிஷ்யம் 3 ஓடிடி உரிமை பிரச்சினை : டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு திரிஷ்யம் 3 ஓடிடி உரிமை பிரச்சினை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Premanathan S - Cuddalore,இந்தியா
26 ஏப், 2026 - 05:04 Report Abuse
Premanathan S வருந்துவது சரி. rip.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap