கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தனது குறும்புத்தனம் மற்றும் அப்பாவித்தனமான நடிப்பால் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகை ஜெனிலியா. கடந்த 2012ல் முன்பு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு 12 வயதில் ரியான் என்கிற மூத்த மகனும் 10 வயதில் ராஹில் என்கிற இளைய மகனும் இருக்கின்றனர்.
தற்போது ரித்தேஷ் தேஷ்முக் மராத்தியில் உருவாகியுள்ள ராஜா சிவாஜி திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன் அந்த படத்தின் டைட்டில் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் சஞ்சய் தத், வித்யா பாலன், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் இளம் வயது சிவாஜி கதாபாத்திரத்தில் ஜெனிலியாவின் இளைய மகன் ராஹில் நடித்துள்ளார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தந்தையின் டைரக்ஷனிலேயே முதன்முறையாக தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார் இந்த நட்சத்திர வாரிசு.