'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண் தற்போது புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக ஜான்வி கபூரும், முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
கடந்த மாதமே படம் வெளியாக வேண்டியது. பட பணிகள் முடியாததால் இம்மாதம் ஏப்., 30ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். தற்போதும் பட பணிகள் முடியாததால் தேதி குறிப்பிடாமல் ஜூன் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. நீண்ட நாட்களாகவே இதில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது என்றும், அதில் நடனமாட தமன்னா, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் ஆகியோரிடம் பேசியதாக தகவல் வந்தது.
இறுதியாக ‛கபுள் பிரண்ட்லி' படத்தின் மூலம் பிரபலமான மானஷா வாரணாசி ஆடுவார் என கூறப்பட்ட நிலையில் அவரும் சம்மதிக்கவில்லையாம். இப்போது தனுஷின் வாத்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா மேனனிடம் பேசி உள்ளனராம். இவர் நடனம் ஆடுவது உறுதியாகி உள்ளது என்கிறார்கள்.