கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

உலக அழகி என்கிற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்து அங்கேயும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன்பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்த அவர் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இன்னொரு பக்கம் தனது மகள் ஆராத்யாவின் படிப்பு மற்றும் வளர்ச்சியில் ஒரு தாயாக கவனம் செலுத்தி குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தனது பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாவை முடித்துவிட்டு சமீபத்தில் மும்பை திரும்பினார்.
அவரை வரவேற்பதற்காக ஒரு தாயாக விமான நிலையத்தில் வரவேற்பு வாயிலில் காத்திருந்தார் ஐஸ்வர்யா ராய். தன்னை வரவேற்க அம்மாவே வந்திருப்பதை பார்த்து சந்தோஷத்தில் குதித்து வந்து அவரை கட்டிப்பிடித்தார் மகள் ஆராத்யா. அதனைத் தொடர்ந்து மகளின் தோழிகள் அனைவரையும் குரூப் போட்டோ எடுப்பதற்காக ஒன்றாக நிற்கச் சொல்லி தானே புகைப்படம் எடுத்துக் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தினார் ஐஸ்வர்யா ராய். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.