மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மலையாளத் திரையுலகம் சமீப வருடங்களாக சில ஆச்சரியமான வசூல் சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சிறிய பட்ஜெட்டில், அவ்வளவு பிரபலமில்லாத நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்கள் 100 கோடி, 200 கோடி வசூல் இலக்குகளை எளிதாக தொட்டு வருகின்றனர். கடந்த 2024 ல் மஞ்சும்மேல் பாய்ஸ் 240 கோடி வசூலித்தது. கடந்த வருடம் வெளியான லோகா சாப்டர் 1 ; சந்திரா திரைப்படம் 300 கோடி வசூலித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான வாழ 2 திரைப்படம் 17 நாட்களிலேயே 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இத்தனைக்கும் இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கிட்டத்தட்ட புதுமுக டீன் ஏஜ் இளைஞர்கள் தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான வாழ படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூலித்தது. அந்த எதிர்பார்ப்பில் வெளியான 'வாழ 2' திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றாமல் 200 கோடி வசூலித்துள்ளது.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் இந்த இரண்டு பாகங்களுக்கும் கதை எழுதி தயாரித்துள்ளார். அந்த வகையில் வெற்றிப்பட இயக்குனராக மட்டுமல்ல தொடர்ந்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் விபின் தாஸ்.