சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

மலையாளத்தில் அடுத்ததாக ரசிகர்களுக்கு ஒரு சம்மர் ட்ரீட்டாக மல்டி ஸ்டார் படமாக வெளியாக இருக்கிறது 'பேட்ரியாட்'. மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் என நான்கு ஹீரோக்கள் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். வரும் மே 1ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக படத்தின் நான்கு ஹீரோக்களும் ஒன்றாக இணைந்து 'லெஜெண்ட்ஸ் ஹேங்கவுட்' என்கிற பெயரில் ஜாலியான உரையாடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள்.
இதுகுறித்த புரோமோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அதில் மம்முட்டி, “இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள் இல்லை. இரண்டு பேர் மட்டுமே” என்று கூற மற்றவர்கள் யாரை சொல்கிறார் என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அதேபோல மம்முட்டியே சிறந்த நடிகர் யார் மம்முட்டியா மோகன்லாலா என்று கேட்டு மீண்டும் அவர்களுக்குள் திகைப்பு ஏற்படுகிறது. இந்த சுவாரசியமான முழு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 23 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.