மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

சென்னையில் நடந்த ‛கர' பட விழாவில் நடிகர் தனுஷிற்கு கலை அசுரன் என்ற பட்டத்தை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில் 'நான் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். பல்வேறு தொழில்களை செய்து வருகிறேன். அனைத்திற்கும் என் மனைவி ஆர்த்தியின்யின் ஆதரவு உண்டு. அவரால் இவ்வளவு வெற்றிகள் பெற்றுள்ளேன். ஆனால், சினிமா தொழிலுக்கு மட்டும் அவர் ஆதரவு இல்லை.
என் மூத்த மகள் ப்ரீத்தா கல்வி நிறுவனங்களை கவனித்து வருகிறார். இப்போது இளைய மகள் குஷ்மிதா சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்கிறார். கர படத்தின் அனைத்து பணிகளையும் அவர் தான் முன்னின்று நடத்தினார். இப்போது மகள் வந்ததால் சினிமா தொழிலுக்கு என் மனைவி ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
இதுவரை தனுசுக்கு எந்த பட்டமும் கொடுக்கப்படவில்லை. அவருக்கு கலை அசுரன் என்ற படத்தை கொடுக்கிறேன். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்துக்காக தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கடுத்து விரைவில் வட சென்னை 2 தொடங்கும். கர படப்பிடிப்பு நடந்தபோது, நான் நடித்த ஹிந்தி படத்தின் பிரமோஷனுக்கு போக வேண்டும். ஒரு நாள் லீவு வேண்டும் என்று கேட்டார். எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தனுஷ் எளிமையாக இருக்கிறார்'' என்றார்.