புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் ஜூன் 15ம் தேதி இருவரும் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்தது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். சமீபத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னையும், மகன், மகள் ஆகியோரை அவர் பார்த்துக் கொள்வதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏப்.,20 (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் காணோளி வாயிலாக ஆஜராக அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் ஜூன் 15ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது.
முன்னதாக விஜய் - சங்கீதா ஆகியோரை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வந்தன. அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து வழங்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.




