கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? |

தமிழில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ஹிந்திப் படத் தயாரிப்பில் அடியெடுத்து வைத்துள்ளது. பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள இந்த நிறுவனம் ஹிந்தியில் சல்மான் கான், நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தைத் தயாரிக்கிறது. அவர்களது தயாரிப்பில் உருவாகும் 63வது படம் இது.
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள், இயக்குனர், நாயகன், நாயகி என படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக நயன்தாரா தனது மகன்களுடன் மும்பை சென்றிருந்தார். ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு நயன்தாரா அடுத்து நடிக்க உள்ள ஹிந்திப் படம் இது.
தென்னிந்திய இயக்குனர்களுடன் அடிக்கடி இணையும் சல்மான் கான் இந்த முறை தெலுங்கு தயாரிப்பாளர், தென்னிந்திய பிரபல நடிகை என முழு தென்னிந்திய குழுவுடன் இணைகிறார்.




