Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு : பேட்ரியாட் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது

17 ஏப், 2026 - 03:50 IST
எழுத்தின் அளவு:
Amicable-agreement-reached-in-the-issue-of-cinema-owners-Patriot-release-issue-resolved
Advertisement

மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என கலர்புல்லான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் பேட்ரியாட். ராணுவ பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் இரண்டு வார வசூல் தொகையில் பங்கு சதவீதம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பிற்கு இடையே சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேட்ரியாட் படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

அதாவது தற்போதுள்ள நடைமுறைப்படி முதல் வாரம் தயாரிப்பாளருக்கு 60% விநியோகஸ்தர்களுக்கு 40%, இரண்டாவாரம் 55-45 மூன்றாவது வாரம் 50-50 என்கிற விகிதத்தில் தான் வசூல் தொகை பகிரப்படுகிறது. இதில் இரண்டாவது வாரமும் 60-40 என்கிற விகிதத்திலேயே கொடுக்கும்படி தயாரிப்பாளர் வலியுறுத்தியதால்தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. தற்போது தயாரிப்பாளர் பழைய நடைமுறை வசூல் விகிதத்திற்கே ஒப்புக்கொண்டதால் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு பேட்ரியாட் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாவதில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் அவரது சகோதரியையும் விமர்சித்த காமெடி நடிகர் கைதுபவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் ... கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த 'வாழ 2' கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap