'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மென்மையான காதல் படங்களை இயக்கிக் கொண்டிருந்த கே ரங்கராஜ். விஜயகாந்தை வைத்து சொந்தமாக தயாரித்த ஆக் ஷன் படம் 'தர்மம் வெல்லும்'. விஜயகாந்த் நடித்த இரண்டு வேடங்களுக்கு ஒருவருக்கு சுஜாதாவும், மற்றொருவருக்கு கவுதமியும் ஜோடியாக நடித்தனர்.
தனது மனைவி சுஜாதாவை விட்டு பிரியும் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். 25 வருடங்களுக்குப் பிறகு அவர் தன் மனைவியை சிறையில் சந்திக்கிறார். அவர் பல கொலைகளை செய்துவிட்டு தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் கைதியாக இருக்கிறார். தன் மகனின் (இன்னொரு விஜயகாந்த்) உதவியுடன் மனைவியை ஜெயிலில் இருந்து எப்படி மீட்கிறார் என்பது படத்தின் கதை.
இந்தப்படம் வெளியான அதேநாளில் விஜயகாந்த் நடித்த 'ராஜநடை' என்ற படம் வெளிவந்தது. 'தர்மம் வெல்லும்' பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.ரங்கராஜ் பெரும் நிதி சிக்கலுக்கு ஆளானார். இப்படம் பெரும் வெற்றி பெறும் என்று பட வெளியிட்டுக்கு முன்பு பல நேர்காணலில் உற்சாகமாக கூறிய விஜயகாந்தை இந்த தோல்வி நிலைகுலய வைத்தது. ஆனால் 'ராஜநடை' படம் வரவேற்பை பெற்று அவருக்கு ஆறுதலை தந்தது.