விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

1950களில் பத்மினி - ராகினி சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். 1980களில் அம்பிகா - ராதா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அக்கா பண்டரிபாயும் தங்கை மைனாவதியும் இணைந்து நடித்த ஒரே படம் 'எங்கள் குலதேவி '
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கே.பாலாஜி கதாநாயகனாக நடித்தார். ஜாவர் சீதாராமன், வி.ஆர்.ராஜகோபால், எம்.சரோஜா, ஏ.கருணாநிதி, எஸ்.எம்.லட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.கே.நாதன் கதை வசனம் எழுதியிருந்த இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ஏ சுப்பாராவ் இயக்கினார்.
இதில் இடம்பெறும் 'மல்கோவா மாம்பழமே' பாடலில் பண்டரிபாயும், மைனாவதியும் பாடி ஆடுவார்கள். அக்கா, தங்கை ஒன்றாக ஆடிப் பாடிய பாடல் இது .
கதை நாயகன் பாலாஜி முதலில் பண்டரிபாயை திருமணம் செய்து கொள்வார். ஒரு ரயில் விபத்தில் அவர் காணாமல் போய்விட அவரது தங்கை மைனாவதியை திருமணம் செய்து கொள்வார். காணாமல் போன பண்டரிபாய் திடீரென திரும்பி வருவார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.




