புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரிக்கும் படம் 'கருப்பு'. ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, சிவதா, சுப்ரிதா, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா சூப்பர் பவர் ஹீரோவாக நடிப்பதாக இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கருப்புசாமி நம் தமிழ் மண்ணோட சாமி. எல்லா மதங்களையும் தாண்டி அய்யனார், முனி, கருப்புசாமி என்று ஊர் வாசலில் பிரமாண்டமாக எழுந்து நிற்பார்கள். மக்கள் உள்ளே வெளியே வந்து போகும்போது 'கருப்பு... கூட வாப்பா' என்று வேண்டிக் கொண்டு செல்வார்கள்.
ஆபத்தான காலகட்டத்தில் உலகம் இருக்கும்போது, அதை தீர்ப்பதற்கு சூப்பர் பவர் ஹீரோ வந்தால் எப்படி இருக்கும்? அந்த ஆபத்துக்களை எல்லாம் அடித்துத் துவைத்து, சாமியாடி, தீமையை வீழ்த்தி நல்லதை நிலைநாட்டினால் எப்படியிருக்கும் என்பதை ஜனரஞ்சகமாக, அதிரடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது என்கிறார் பாலாஜி.




