Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செட்டில் பண்ண வேண்டி இருக்கு, படத்தை ஓட வையுங்க : இயக்குனர் விக்னேஷ் சிவன்

15 ஏப், 2026 - 06:24 IST
எழுத்தின் அளவு:
There-is-something-to-be-settled,-let-the-film-run-Director-Vignesh-Sivan
Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்த ‛எல்ஐகே' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. தமிழ், தெலுங்கு பதிப்புகளில், உலகம் முழுக்க இன்று வரை 50 கோடிவரை வசூலித்துள்ளதாலும், அடுத்த வாரங்களில் படத்தின் வசூலை அதிகரிக்கவும் இந்த நன்றி அறிவிப்பு விழா நிகழ்ச்சி என்றும் கூறப்பட்டது.

இதில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஹீரோயின் கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் அனிருத், படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் வரவில்லை. இந்த விழாவில் தனக்கே உரிய காமெடி ஸ்டைலில் பேசினார் விக்னேஷ் சிவன்.

அவர் பேசுகையில் ''இந்த படம் பற்றி இன்ப்ளூயன்சர்கள் தவறாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு செலவழிக்க எங்களிடம் பணம் இல்லை. ஏதாவது முன்னபின்ன எழுதி இந்த படத்தை ஓட வையுங்க. இப்ப தம் லைன் கலாச்சாரம் அதிகரிக்கிறது. மேடையில் கதறி அழுத விக்னேஷ் சிவன், மேடையை உடைத்தார் என ஏதாவது போட்டு படத்தை ஓட விடுங்க. படம் கேவலமாக இருக்கிறது வீடியோ ஆரம்பித்து, உள்ளே நல்லவிதமாக பேசுறாங்க. அதை எப்படி கையாளுவது என எனக்கு தெரியலை. ஏன்னா, நான் இன்னும் செட்டில்மென்ட் பண்ண வேண்டியது இருக்கிறது. இந்த வாரம் படம் ஓடிவிடும். அந்த பணம் கிடைத்துவிடும்னு பலர் காத்திருக்கிறார்கள். இந்த படத்தை ஓட வையுங்க. அப்படி ஓட விட்டால் ராமசாமி கதைதான். அந்த பணம் ஊ....ஊதான். என்னை உங்க வீட்டு பிள்ளையாக நினைத்து படத்தை ஓட வையுங்க.

நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க. நான் கேசரி செய்தால் ஏன் காரமாக இல்லைனு கேட்கிறாங்க. நான் சிக்கன் குழம்பு வைத்தால் ஏன் இனிப்பாக இல்லை என்கிறார்கள். படத்துல நல்ல விஷயங்கள் இருக்கிறது. என்னால் பயங்கரமாக படம் எடுக்க தெரியாது. உங்களுக்கு பயங்கரமாக கோபம் வந்தால் மனசுக்குள்ள வெச்சுக்கோங்க . என்னிடம் போனில் பேசுங்க. நேரில் பார்க்கும்போது உங்க கருத்தை தெரிவியுங்க. ஏன்டா இப்படி பண்ணினேனு கேளுங்க. ஒரு வீடியோ போட்டு ஏதாவது செய்யாதீங்க. மீண்டும் சொல்கிறேன் , எனக்கு செட்டில் பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. படம் நல்லா ஓடணும்.

எங்கள் ஹீரோ செல்லக்குட்டி பிரதீப்பின் இந்த படமும் 100 கோடியை அள்ளியதுனு போஸ்டர் ஓட்டணும். அதுக்கு படத்தை ஓட வையுங்க'' என்றார் . மேலும் அவர் என் நண்பர் எச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் படம் லீக் ஆகியுள்ளது. அந்த கஷ்டம் கொடுமையானது. அது மரணவலி போன்றது' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கருப்பு படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசிய த்ரிஷாகருப்பு படத்திற்கு சொந்த குரலில் ... திரில்லர் பாணியில் உருவாகும் 'குற்றம் கடிதல் 2 திரில்லர் பாணியில் உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap