விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து, இசையமைக்க உள்ளார். இதை 'ஜோ' வெற்றி படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
'ஜோ' படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு துங்குகிறது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கின்றன.




