Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லீடர், காளிதாஸ் 2, ஹாப்பி ராஜ் படங்கள் மற்றும் கடந்த வார படங்களின் நிலை என்ன?

13 ஏப், 2026 - 03:22 IST
எழுத்தின் அளவு:
What-is-the-status-of-Leader,-Kalidas,-Happy-Raj-and-last-weeks-films
Advertisement

துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‛லெஜண்ட்' சரவணன் நடித்த ‛லீடர்' படம் எப்படி? வெற்றி படமா என்று விசாரித்தால், அந்த படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி இருந்தததால் முதல் 2, 3 நாட்கள் நல்ல ஓபனிங் இருந்தது. சமீபத்தில் கூட படக்குழு, அவர் ஆதரவாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த படத்தின் பட்ஜெட் அதிகம், இயக்குனர் சம்பளம் அதிகம் என்றாலும் விமர்சன ரீதியாக படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. லெஜண்ட் சரவணனின் முதல் படத்தைவிட, இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு என்பதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. விரைவில் அடுத்த பாகத்தை தொடங்க உள்ளனர்.

பரத் நடித்த காளிதாஸ் 2 படத்துக்கு ஆரம்பம் முதல் பெரிய வரவேற்பு இல்லை. அந்த படக்குழுவினர் பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தினர். ஆனால், எதிர்பார்த்த லாபம், வரவேற்பு கிடைக்கவில்லை.

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‛ஹாப்பிராஜ்' படம் தியேட்டரில் பெரிதாக ஓடவில்லை என்றாலும், தயாரிப்பாளர் நஷ்டம் ஆகவில்லையாம். அதனால், அவர்கள் ஹாப்பியாக இருக்கிறார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்.

அதேப்போல் சமுத்திரகனி நடித்த ‛கார்மேனி செல்வம்', இலங்கையை கதைக்களமாக வைத்து வெளியான ‛நீளிரா' படங்களுக்கு விமர்சனம் நன்றாக வந்திருந்தாலும் வசூலை ஈட்டவில்லை.

கடந்த வாரம் வெளியான படங்களில் விக்னேஷ் சிவனின் எல்ஐகே படத்துக்கு நல்ல ஓபனிங். ஆனால் விமர்சனங்கள் கலவையாக இருப்பதால் இந்த வார கலெக் ஷன் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு. வெற்றி படத்தில் அது சேர வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

நட்டி நடித்த ‛டிஎன் 2026' படம் பிக்-அப் ஆகி வருகிறது. சின்ன பட்ஜெட் என்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது, டிஜிட்டல், சாட்டிலைட் விற்றுவிட்டால் அவர்கள் நிம்மதியாகி விடுவார்கள்.

செல்வராகவன் நடித்த மனிதன் தெய்வமாகலாம் வந்ததே தெரியவில்லை. அதபோல், ரீ ரிலீஸ் ஆன சத்யராஜின் அமைதிப்படை படமும் தோல்வி அடைந்துள்ளது. கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் தமிழ், தெலுங்கு சேர்ந்து 100கோடியை தாண்ட உள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம்படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா ... ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது ராஜன் வகையறா படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

14 ஏப், 2026 - 12:04 Report Abuse
Santhosh Kumar no interesting fact in kalidasan 2..வெகு சுமாரான கதை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap