சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

செவன் ஸ்கிரீன் நிறுவன தயாரிப்பில் அனிரூத் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் எல்.ஐ.கே மூன்று நாட்களில் தமிழ் நாட்டில் ரூ. 15 கோடி வசூலித்துள்ளது மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் ரூ.4.75 கோடியும் மற்றும் வெளிநாடுகளில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. உலகளவில் சுமாராக ரூ.26 கோடி வசூல் செய்துள்ளதாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இந்த படத்தின் பொருட்செலவை ஒப்பிடும் போது தயாரிப்பாளர் மற்றும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.