சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

விடுதலை 2 படத்திற்கு பிறகு தமிழில் மஞ்சு வாரியார் நடித்துள்ள படம் 'மிஸ்டர் எக்ஸ்'. ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், அனைகா, அதுல்யா ரவி, உள்பட பலர் நடித்துள்ளனர். மனு ஆனந்த் இயக்கி உள்ளார். ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
படத்தில் நடித்திருப்பது பற்றி மஞ்சு வாரியார் கூறும்போது "இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான்தான். இயக்குனர் மனு இந்தக் கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார்.
எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.