தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா |

பாலிவுட் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏக்தா கபூர். பிரபல பாலிவுட் நடிகரான ஜிதேந்திராவின் மகளான இவர் தற்போது ஹிந்தியில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வந்தாலும் ஒரு காலத்தில் சீரியல் தயாரிப்பில் அடி எடுத்து வைத்து தான் பிரபலமானார். குறிப்பாக தமிழில் இவர் தயாரித்த சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த் தான் என்று கூறியுள்ளார் ஏக்தா கபூர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் தந்தையும் ரஜினிகாந்தும் நண்பர்கள். ஒரு முறை எனது வீட்டிற்கு மதிய விருந்துக்காக ரஜினிகாந்த் வந்தார். அப்போது நான் டல்லாக இருப்பதை பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று என்னிடம் விசாரித்தார். எனக்கு வேலை இல்லை, நான் வேலை செய்ய விரும்புகிறேன் என்று அவரிடம் கூறினேன். அவ்வளவு தானே, பிரச்னையை விடு.. முக்கியமான ஒரு நபருடன் உனக்கு சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறேன் என்று கூறினார். அதன்பின் அந்த முக்கிய நபருடனான சந்திப்பிற்கு பிறகு எனக்கு தமிழில் சீரியல் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வடநாட்டிலிருந்து இங்கே வந்து சீரியல் தயாரிப்பதா என ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல நல்ல சீரியல்களை கொடுத்தேன். இங்கே வெற்றி கிடைத்ததை தொடர்ந்து தான் பாலிவுட்டிலும் எனக்கு சீரியல் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நான் நட்சத்திர வாரிசு என்கிற அடிப்படையில் டிவி மற்றும் சினிமாவில் நுழைந்ததாக அவர் சொன்னாலும் கூட கிடைத்த வாய்ப்பை என்னுடைய திறமையால்தான் நான் தக்கவைத்துக் கொண்டேன் என்பது தான் உண்மை” என்று கூறியுள்ளார்.