Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ?

11 ஏப், 2026 - 04:47 IST
எழுத்தின் அளவு:
Do-you-know-what-films-have-been-leaked-in-Tamil-before
Advertisement

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இணையங்களில் திருட்டுத்தனமாக 'லீக்' ஆனது. யார் லீக் செய்திருப்பார்கள், என்ன காரணம் என்பது விசாரணையில் தெரிய வரும்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன், அதிலும் அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் விஜய்யின் படம் இப்படி வெளியானது இந்தியத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மொழித் திரைக் கலைஞர்களும் இதற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் இப்படி இரண்டு படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பாகவே சி.டி மூலமாகவும், இணையம் மூலமாகவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையதளங்கள் அதிகளவில் பிரபலமாவதற்கு முன்பாக 90களில் ராதாமோகன் இயக்கத்தில், பிரகாஷ்ராஜ் நடிக்க, இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் மகன் முரளி தயாரித்த 'அனந்த கிருஷ்ணன்' என்ற படம் சி.டி.யில் திருட்டுத்தனமாக வெளியாகியது. அதன் காரணமாக படம் தியேட்டர்களுக்கு வராமலேயே போய்விட்டது.

அடுத்து 2010ம் ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சரத்குமார், ஸ்ரேயா நடித்த 'ஜக்குபாய்' திரைப்படம் இணையங்களில் வெளியானது. அதன் காரணமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மீண்டும் படமாக்கினார் இயக்குனர். அதன்பின் படத்தைத் தியேட்டர்களில் வெளியிட்டார்கள். ஆனாலும், வரவேற்பைப் பெறவில்லை.

இணையதளங்களில் 'பைரசி' இணையதளங்கள் வந்த பிறகு படம் வெளியான அன்றே பல படங்கள் வெளியாகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டும் என்று திரையுலகினர் எவ்வளவோ கூறினாலும் அது இன்னும் தடுக்கப்படமாலேயே உள்ளது. இப்போது டெலிகிராம், வாட்சப் போன்ற தளங்கள் மூலமும் படங்களை பரப்புகின்றனர்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் படங்களை இப்படி திருட்டுத்தனமாக வெளியானாலும் உடனடியாக அவற்றை நீக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்படி வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணி மீது ஹன்சிகா வழக்குஅண்ணி மீது ஹன்சிகா வழக்கு 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap