தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

கமல் நடிப்பில் வெளிவந்த 'அபூர்வ சகோதரர்கள்' படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல். அதில் அவர் குள்ள மனிதனாக நடித்து இந்திய அளவில் பெரிய சாதனை படைத்தார். குடும்பத்தை அழித்தவர்களை நாயகன் பழிவாங்கும் சாதாரண கதைதான். ஆனால் படத்தின் திரைக்கதை, பாடல்கள், குள்ள கமல் இதன் காரணமாக படம் 175 நாளை கடந்து வெள்ளி விழா கொண்டாடிது.
இந்த படத்தில் இன்னொரு அரிய தகவல் உண்டு. இந்த படத்தை முதலில் கமல் ஆரம்பித்து விட்டார். மனோராமா நடித்த அம்மா கேரக்டரில் காந்திமதி நடித்தார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பும் முடிந்தது. 'ராஜா கைய வச்சா' பாடல் இடம்பெற்ற அதே இடத்தில் 'எங்க அம்மாவோட காலத் தொட்டு கும்பிடணும்டோய்' என்ற பாடல் எடுக்கப்பட்டது. இதில் காந்திமதியும், கமலும் ஆடியிருந்தனர்.
எடுக்கப்பட்ட வரையில் படம் கமலுக்கு திருப்தியில்லை. இதனால் படத்தை அப்படியே நிறுத்தி விட்டு பஞ்சு அருணாசலத்தை அழைத்து திரைக்கதையை ஒரு ஜாலியான கதையாக மாற்றித் தரும்படி கூறினார். அப்படி மாற்றியபோது அம்மா கேரக்டரும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று அதன் பிறகு அம்மா கேரக்டரில் மனோரமா நடித்தார்.
எங்க அம்மா பாடல் படத்தில் சேர்க்கவில்லை என்றாலும் இப்போது சில யுடியூப் தளங்களில் அந்த பாடலை காண முடிகிறது.




