Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா?

11 ஏப், 2026 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Jananayagan-leak-Many-actors-appeal,-will-action-be-taken
Advertisement

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பாகவே இணையங்களில் லீக் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல நடிகர்கள் அவர்களது கண்டனங்களையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். விஜய் கட்சி தரப்பிலிருந்து அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கூட இதற்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி 'டிரோல்' செய்யும் நடிகர்களான சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா என பலரும் இது குறித்து தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு படம் வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படி 'லீக்' செய்யப்படுவது சினிமா உலகத்திற்கே ஆபத்தான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர் என நான்கு தரப்புக்குத்தான் இந்தப் படத்தின் 'ஹார்ட் டிஸ்க்' பைல்களை பயன்படுத்தும் அதிகாரம் உள்ளது. வேண்டுமென்றால் நடிகர் விஜய் தரப்புக்கும் அவர்கள் கொடுத்திருக்கலாம். அவரது மேனேஜர் ஜெகதீஷ் தான் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர். மேலும், விஜய் கூட படத்தின் காட்சிகளைப் பார்த்து அடிக்கடி ஆலோசனை சொல்லியிருக்க வாய்ப்புண்டு.

'ஜனநாயகன்' படம் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய ஒரு திரைப்படம். அதன் தணிக்கை சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் தள்ளிப் போனது. அதன் பின் நீதிமன்ற வழக்கு, பின்னர் வழக்கு வாபஸ் என இழுக்கப்பட்டு, கடைசியில் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே படத்தின் வினியோகஸ்தர்கள், ஓடிடி உரிமை பெற்றவர்கள் இப்படத்தின் வியாபாரத்திலிருந்து பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் முழு படமும் வெளிவந்த பிறகு அது சட்ட விரோதம் என்று தெரிந்தும் அதைப் பலரும் டவுன்லோடு செய்து பார்த்திருக்க வாய்ப்புண்டு. அது படத்தின் வியாபாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

பல நடிகர்கள், திரையுலகினர் என குரல் கொடுத்துள்ள நிலையில் தேர்தல் காலமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் இந்த 'லீக்' குறித்து உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த்ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், ... 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap