பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் |

வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கையால் முடங்கியது.
தேர்தல் முடிந்ததும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்பே மொத்த படமும் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவிற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கே அதிர்ச்சியை தந்துள்ளது. இதற்கு சினிமாவிலிருந்து முதல் ஆளாய் நடிகர் சிவகார்த்திகேயன் குரல் கொடுத்துள்ளார். தொடர்ந்து சிரஞ்சீவி , சூர்யா, விஷால், குஷ்பூ, தயாரிப்பாளர்கள் சங்கம் என பலரும் பைரசிக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
படத்தை தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் யாரும் பைரசி வீடியோவை பதிவிறக்கம் செய்யாதீர்கள், பகிரவும் செய்யாதீர்கள், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
ஜனநாயகன் படம் லீக் ஒரு விபத்து அல்ல. இது ஒரு முறையற்ற அமைப்பின் தோல்வியால் விளைந்தது. தணிக்கை நடைமுறைகள் சரியான நேரத்தில் நடந்திருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான தாமதங்கள், திருட்டுத்தனமாகப் படம் வெளியாவதற்கான சாதகமான சூழலை உருவாக்கிவிட்டன. சட்டப்பூர்வமான வழிமுறைகள் முடக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன.
திரைப்படத் திருட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அது கலைக்கும் கலைஞர்களுக்கும் எதிரான நேரடித் தாக்குதல். நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் இது ஆபத்தில் ஆழ்த்துகிறது.
நாம் நேசிக்கும் சினிமாவைக் காப்பதே இவர்கள்தான். அமைப்பு தோற்றுப்போகும்போது, படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? நமக்குப் பொறுப்புக்கூறல், விரைவான சான்றிதழ் வழங்கல், கடுமையான அமலாக்கம் மற்றும் உடனுக்குடன் இணையதளங்களில் இருந்து திருட்டுப் பிரதிகளை அகற்றும் நடவடிக்கை ஆகியவை அவசியம் தேவை. உண்மையான சினிமா ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கடந்த காலங்களில் நீங்கள் எனக்கு ஆதரவாக நின்றது போலவே, இப்போது இந்தப் படத்தை திரையரங்குகளில் சட்டப்பூர்வமாகப் பார்த்து இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
கார்த்தி
ஜனநாயகன் திரைப்படம் கசிந்தது மொத்த திரையுலகத்தையே பாதித்துள்ளது. இந்தச் செயல் நியாயமற்றது, அறநெறியற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது. பார்வையாளர்கள் படக்குழுவினருடன் துணை நின்று, திரைப்படத்தைச் சரியான முறையில் பார்த்து சினிமாவின் ஆன்மாவைக் காக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.