முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! |

கனடா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன். அந்த நாட்டில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிர்வாண படங்களில் நடித்து, இயக்கி உலக அளவிலான பார்ன் ஸ்டாராக இருந்தார். இந்திய தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி மூலம் இந்தியா வந்தவர் இங்கு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிப்பு, நடனம் என இப்போதும் பிசியாக இருக்கிறார். திருமணமும் செய்துள்ளார்.
சன்னி லியோன் ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'தி ஜெயன்ட்' என்ற அந்த வெப் தொடரை கெவின் பி பிளாத் எழுதி இயக்குகிறார். இதில் சன்னி லியோன் சட்ட அமலாக்க அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இத்தொடரில் நடிப்பது பற்றி சன்னி லியோன் கூறும்போது, “நான் இதற்கு முன்பு நடித்ததில் இருந்து இது மாறுபட்ட ஒன்று. அதுதான் இதை ஏற்க வைத்தது. புதிய கதாபாத்திரத்தை ஆராய்வதும், முற்றிலும் புதிய களத்துக்குள் நுழைவதும் எனக்கு சிலிர்ப்பான அனுபவம். இந்த தொடரின் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதில் பணியாற்றுவதை எவ்வளவு ரசிக்கிறேனோ, அதேஅளவு எனது ரசிகர்களும் இத்தொடரை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.




