மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா, வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் சாதனை படைத்தவர். இவரது மகன் ஜூனியர் பாலைய்யா என்ற பெயரில் நடித்தார். ஆனால் பாலையாவின் மகளும் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார் என்பது பலர் அறியாதது.
பாலையாவின் மகள் பெயர் மனோசித்ரா. 'மாதுளை முத்துக்கள்' படத்தின் மூலம் தமிழிலும், 'மழநிலவு' என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படம் அவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து மலையாளத்தில் ஒரு பைங்கிளிக் கதா, ஈ வழி மாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம் சாரிகா, உமா நிலையம், குருஜி ஒரு வாக்கு போன்ற பல படங்களிலும், தெலுங்கில் ஸ்ரீ வாரி ஷோபனம், டெரர், மாவாரி கோலா போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
சரியான வாய்ப்புகள் இன்றி சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரியானார். தொடர்ந்து 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்திருக்கிறார். பின்னர் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.