'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

அந்தக் காலத்தில் பல படங்கள் இசைக்காவும், பாடல்களுக்காவும் ஒடியதால் பாடலாசிரியர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. இதனை கண்ணதாசன் தொடங்கி வைத்தார். பின்னாளில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா முதல் ஜி.வி.பிரகாஷ் வரை படம் தயாரித்தார்கள்.
இப்படியான நிலையில் 1959ம் ஆண்டு இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன், வயலின் இசை கலைஞர் வயலின் மகாதேவன், பாடகர் வி.கே.முத்துராமலிங்கம், பாடலாசிரியர் மருதகாசி ஆகியோர் இணைந்து 'அல்லி பெற்ற பிள்ளை' என்ற படத்தை தயாரித்தார்கள். இது அப்போது வெளிவந்த டொங்கா வாலி என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்.
படத்தை கே.சோமு இயக்கினார். ஏ.பி.நாகராஜன் திரைக்தை எழுதினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், பண்டரிபாய், எஸ்.வி.சகஸ்ரநாமம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.